Chennai Child | சென்னையில் ரயில்வே மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க போன சிறுவனுக்கு கொடூரம்
சென்னையில் ரயில்வே மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்று படுகாயமடைந்த சிறுவன்
சென்னை வியாசர்பாடியில் ரயில்வேயின் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளார்.
சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 12 வயது சிறுவன், வியாசர்பாடி கூட்ஸ் செட்டில் உள்ள உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க, ரயிலின் மேல் ஏறிய போது விபத்தில் சிக்கி உள்ளார்.
மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன், படுகாயங்களுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.