Today Headline | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30-12-2025) | 1 PM Headlines | Thanthi TV
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக சவரனுக்கு மூவாயிரத்து 360 ரூபாய் குறைந்துள்ளது... ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
- சென்னையில், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.... எழும்பூரில் உள்ள கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்...
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்... கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்....
- வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது... சிறப்பு பூஜைக்கு பின் காலை 5.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அணிந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்...
- இரண்டு கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, 22 ஆயிரத்து 291 டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... ரொக்கப் பணம், கரும்பு கொள்முதல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...