Awareness | Police | நள்ளிரவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய SI.. குவியும் பாராட்டுகள்..
சிதம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு காவல் உதவி ஆய்வாளர், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது கவனம் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை ரயில்வே காவல் உதவி ஆய்வாளரான ராஜு, சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் பொருள்களை வாங்க வேண்டாம் என்றும், பெண்கள் தங்களது ஆடைகளை வைத்து தங்க நகைகளை மறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.