S.M.Sugumar | AIADMK | "இளைஞர்கள் வாழ்வில் சாதிக்க வேண்டும்" - எஸ்.எம்.சுகுமார் கொடுத்த அட்வைஸ்
"இளைஞர்கள் வாழ்வில் சாதிக்க வேண்டும்"
போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் இளைஞர்கள் விளையாட்டுதுறையில் சாதிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் வலியுறுத்தியுள்ளார். தாழனூர் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை அவர் வழங்கினார். அப்போது பேசிய எஸ்.எம்.சுகுமார், மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி வாழ்வில் முன்னேற இளைஞர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.