பள்ளியில் கஞ்சா வியாபாரம்...நேர்மையாக இருந்த மாணவனுக்கு நேர்ந்த சோகம்

Update: 2025-02-28 04:57 GMT

தக்கலை அரசுப்பள்ளியில் மாணவரை சக மாணவர்கள் கொடூரமாக தாக்கியதால் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அடிட் டிட்ஜில் என்ற மாணவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவருடன் படிக்கும் சில மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். இதனால், அடிட் டிட்ஜில் மீது அந்த மானவர்களுக்கு முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு வாங்க பள்ளிக்கு வந்த அடிட் டிட்ஜிலை சக மாணவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், மயங்கி விழுந்த அடிட் டிட்ஜில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்