School |"பூட்டிய க்ளாஸ் ரூமுக்குள் ஆண், பெண்.." சர்ச்சையான விசாரணை அதிகாரிகள் விசாரணை
ஓசூர் அரசுப்பள்ளி வகுப்பறையில் ஆண் மற்றும் பெண் இருந்த விவகாரம் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.
ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கடந்த 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்குள் நுழைந்த ஒரு ஆணும் பெண்ணும் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து கதவை பூட்டியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் கதவை தட்டியதும், வெளியே வந்த நபரிடம் கேள்வி கேட்டு மாணவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி பொறுப்பு அதிகாரி முனிராஜ், பள்ளிக்கு நேரில் சென்று, தலைமை ஆசிரியர் காந்தி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.