Salem | Theft | படத்தை விஞ்சும் முதுகில் குத்திய சம்பவம்.. நள்ளிரவில் வந்த கும்பலை ஓடவிட்ட தம்பதி
சேலத்தில் ஏர்கன் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களை, தம்பதியினர் துணிச்சலாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் குகை மாரியம்மன் கோவில் பகுதியில், சாஸ்தா கிருபா என்பவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் ஹெல்மெட் மற்றும் குல்லா அணிந்து புகுந்த இரண்டு பேர், துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி, பணம் நகை கேட்டு மிரட்டி உள்ளனர். சாஸ்தா கிருபாவும் அவருடைய மனைவியும் துணிச்சலாக கொள்ளையர்களுடன் போராடி அவர்களிடமிருந்த ஏர்கன் மற்றும் கத்தியைப் பறித்தனர். அவர்களின் முகமூடியை விலக்கி பார்த்ததில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் மணி என்பது தெரியவந்தது. அங்கிருந்து மணி தப்பிச் சென்றதை அடுத்து, ஜெயராமனை கைது செய்த போலீசார், தப்பியோடிய மணியையும் தேடிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.