salem | Chain Snatching | சமையல் பொருளை வைத்து செயின் பறிப்பு - ரோட்டில் செல்லும் பெண்களே உஷார்

Update: 2025-12-30 06:33 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

தளவாய்பட்டி கிராமத்தில் இந்திராணி என்பவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, பெண்ணை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் மிளகாய் பொடித் தூவி 2 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஆத்தூர் நகர போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரித்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்