Sai Sudharsan | Iit Madras | தமிழக இளைஞர்களுக்கு சாய் சுதர்சன் சொன்ன அட்வைஸ்

Update: 2025-12-15 02:26 GMT

இளைஞர்கள் தங்களது நம்பிக்கையை பின்தொடர்ந்தால் தங்களது இலக்கை நிச்சயமாக அடைய முடியும் என கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் அறிவுறுத்தி உள்ளார். இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான 58வது விளையாட்டு போட்டி சென்னை ஐஐடி வளாகத்தில் தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். இதுபற்றி பேசிய மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் இதில், 23 ஐஐடி கல்வி நிறுவனங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 500 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் 13 போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக கூறினார். மேலும், இதில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்