Seeman| NTK|சீமான் வெளியே போகும்போது வார்த்தையை விட்டதாக.. முக்கிய கட்சி பிரமுகரை தாக்கிய நாதகவினர்

Update: 2025-12-15 04:59 GMT

விருத்தாச்சலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தரைக்குறைவாக பேசியதாக சொல்லி திமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில கோரிக்கை மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிகழ்ச்சியை முடித்து வெளியில் காரில் வரும்போது திமுக பிரமுகர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் திமுக பிரமுகரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து சீமான் அங்கிருந்து காரில் புறப்பட்ட நிலையில், திமுக பிரமுகரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்