ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலரை முற்றுகையிட்ட மக்கள் - பரபரப்பு காட்சிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் வாகன நிறுத்தும் இடங்களை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவில் செயல் அலுவலரை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக அலுவலர் கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.