Viluppuram | வயலுக்கு சென்றவர் பிணமாக கிடந்த பேரதிர்ச்சி - உடலை பார்த்து கதறும் உறவினர்கள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாய நிலத்தில் பன்றி வராமல் தடுக்க அமைத்த மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.
செஞ்சியை அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவர், பன்றி வராமல் தடுக்க தனது நிலத்தை சுற்றி சட்டவிரோதமாக மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், அவ்வழியாக சென்ற லட்சுமணன் என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.