Villupuram பஸ் ஓட்டும் போதே திடீர் வலிப்பு..துடிதுடித்த அந்த நிலையிலும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்

Update: 2025-12-19 10:40 GMT

Villupuram பஸ் ஓட்டும் போதே திடீர் வலிப்பு..துடிதுடித்த அந்த நிலையிலும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்ட நிலையில், சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பேருந்தை லாவகமாக மோதி பயணிகளை காப்பாற்றினார். செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநர் திருமலை என்பவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்தின் வேகத்தை குறைத்து, பின்னர் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் லாவகமாக மோதி பேருந்தை நிறுத்தி, பயணிகளை காப்பாற்றியுள்ளார். இதையடுத்து ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்