நடிகர் தம்பி ராமையாவின் பறை இசை.. குடும்பத்தோடு ஆடி மகிழ்ந்த IAS, IPS அதிகாரிகள்

Update: 2024-01-14 16:21 GMT

சென்னை விருகம்பாக்கத்தில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வசித்து வரும் டாயிஷா குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதில், ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, பிரியா ரவிச்சந்திரன், ஆவடி காவல் ஆணையர் சங்கர், ஐஜி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் பறை ஆட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், தப்பாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடிகர் தம்பி ராமையா பறை இசையை அடிக்க, அதிகாரிகள் சிலர் நடனமாடி குதூகலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்