சென்னை திருவொற்றியூரில், மின்தடை ஏற்பட்டதால் மின்சார வாரிய அலுவலகத்தில் பொதுமக்களுக்கும் மின்வாரிய அலுவலக ஊழியர்களுக்கும் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக பூட்டப்பட்டிருந்த மின்வாரிய அலுவலகத்தை திறக்கக் கோரி மக்கள் கூச்சலிட்டனர். அப்போது போலீசார் வந்ததை அடுத்து, இருதரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அடிக்கடி ஏற்படும் மின் தடையை போக்க, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.