ஸ்பாட்டிலேயே கைது வாகனமாக மாறிய பயணிகள் பேருந்து - மக்கள் தவிப்பு

Update: 2025-07-18 02:16 GMT

தஞ்சாவூரில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை கைது செய்ய, பேருந்தில் சென்ற பயணிகளை போலீசார் பாதியில் இறக்கியுள்ளனர். தஞ்சாவூரில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்யும் போது வாகனம் இல்லாததால், அப்பகுதியே வந்த அரசு பேருந்தை நிறுத்தி அதில் ஆசிரியர்களை ஏற்றினர். மேலும் இதற்காக பேருந்தில் வந்த பயணிகளை பாதியிலேயே இறக்கிவிட்டனர். இதனால் பயணிகள் சாலையில் செய்வதறியாது தவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்