பிறந்தநாளில் மனைவி கண்முன்னே பிரிந்த கணவன் உயிர் - கொடுமையிலும் கொடுமை
திருச்செங்கோடு அருகே பிறந்தநாளுக்கு கோயிலுக்கு சென்ற கணவர், விபத்தில் சிக்கி மனைவி கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருசாமிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், தனது பிறந்தநாளையொடி மனைவி, குழந்தையோடு பைக்கில் கோயிலுக்கு சென்றுள்ளார். சுண்டாங்கிபாளையம் பிரிவு ரோடு அருகே, எதிர்திசையில் வந்த ஆம்னி வேன் பைக் மீது நேருக்கு நேர் மோதியதில், ஹெல்மெட் போடாமல் வந்த ஹரிகிருஷ்ணன் தலையில் பலத்த காயங்களுடன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி ஸ்வேதா மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நற்வாய்ப்பாக குழந்தை உயிர் பிழைத்தது.