Omalur | Road | மேம்பால சாலையை சீரமைப்பதில் முறைகேடு - தந்தி TV செய்தி எதிரொலி அதிகாரிகள் அதிரடி

Update: 2025-12-13 13:35 GMT

ஓமலூரில் பழுதடைந்த ரயில்வே மேம்பால சாலையை சீரமைக்கக் கோரி, தந்தி டிவியில் கடந்த 10-ம் தேதி செய்தி வெளியான நிலையில், சாலையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் பள்ளத்தை சீரமைத்து போட்டோ எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒப்பந்த நிறுவனத்தினர் மக்களை ஏமாற்றியதாக தெரியவருகிறது. ஆகவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த சாலை முழுவதுமாக சரிசெய்யப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்