Tiruchendur Accident | டூவீலரில் மோதி கால்வாயில் பாய்ந்த வேன் | ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த கதி
திருச்செந்தூர் அருகே, ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகன மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 16 பேர், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த போது, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த அழகபாண்டியன் என்பவர் பலியான நிலையில், சாலையோர கால்வாயில் வேன் பாய்ந்ததில், ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.