தாலி கட்டாமல் 10 ஆண்டுகள் பழக்கம் - ஏமாற்றியதாக பெண் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடியில் தாலிகட்டாமல் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து பலசரக்கு கடை உரிமையாளர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக குற்றம்சாட்டி, பெண் ஒருவர் கடைக்குள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஜெயா என்றப் பெண், பலசரக்கு கடைக்குள் நுழைந்து தன்மீதும், தன்னை ஏமாற்றியதாக கடை உரிமையாளரான செல்லபாண்டி என்பவர் மீதும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் 2 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்பு, கடைக்குள் செல்லபாண்டியிடம் தகராறில் ஈடுபட்ட அவரை போலீசார் சமானம் செய்தனர். இந்த சம்பவத்தில் செல்லப்பாண்டிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உயிரிழந்த நிலையில், 2 பிள்ளைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர் தன்னோடு 10 ஆண்டுகளாக பழகிவிட்டு மற்றொரு பெண்ணை 2வது திருமணம் செய்த ஆத்திரத்தில், இப்படி தற்கொலைக்கு முயன்றதாக தெரியவருகிறது. தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டிய நிலையில், போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.