முருகன் கோயிலில் ரகசிய அறைகள் - ஆச்சரியத்தில் உறைந்த தொல்லியல் துறையினர்
முருகன் கோயிலில் மறைந்திருந்த ரகசிய அறைகள்.. ஆச்சரியத்தில் உறைந்த தொல்லியல் துறையினர்
திருவள்ளூர் அருகே உள்ள முருகன் கோவிலில் 2 ரகசிய அறைகள் இருப்பதை தொல்லியல் துறையினர் உறுதி செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க தொல்லியல் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, இக்கோவிலில் தொல்லியல் துறையினர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் ஆய்வு நடத்தினர். ஆய்வில், கோவிலில் 2 ரகசிய அறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, ரகசிய அறைக்குள் இறங்கி தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.