திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே, கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருனாப்பட்டு பகுதியைச் சேர்ந்த
சீனிவாசன் - சிலம்பரசி தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர். குஜராத்தில் இருந்து 10 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்த சீனிவாசனுக்கும், சிலம்பரசிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிலம்பரசி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகக்கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் எட்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிலம்பரசியின் குழந்தை, அப்பா தான் அம்மாகிட்ட சண்டை போட்டுக்கொண்டிருந்தார் என மழலைக் குரலில் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.