நண்பனின் தங்கையிடம் அசிங்கம் செய்த நபர்... ஆத்திரத்தில் சமாதிகட்டிய அண்ணன்
ராமேஸ்வரத்தில் தங்கையிடம் சில்மிஷம் செய்த நண்பனை கொன்று புதைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் வெண்மனி நகர் பகுதியை சேர்ந்த நம்புராஜா, அவரது நண்பரான வெங்கடேசன் என்பவரின் தங்கையிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தாக்கியதில், நம்புராஜா உயிரிழந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் நம்புராஜா உடலை குழித்தோண்டி புதைத்த வெங்கடேசன், ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.