திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், தமிழ் ஓதுவார்கள் விவகாரத்தில் தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோவில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனை ஒட்டி யாகசாலை பூஜை தொடங்கியுள்ளது. இதனிடையே, யாகசாலை பூஜையில் தமிழ் ஓதுவார்கள் இருக்கிறார்களா என அடையாளம் காட்ட சொல்லி யாகசாலைக்குள் செல்ல முயற்சித்த தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும் கோவில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.