இரவில் திருடுபோன சாமி நகைகள். கோவில் வாசலில் இருந்த மூட்டை. திறந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-05-22 13:34 GMT

சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் பழமைவாய்ந்த ஐராதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை, வழக்கம் போல் பூஜைகள் முடித்து, அர்ச்சகர் கோயிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, சாமி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வெண்கல பொருட்களை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த நிலையில், கோயில் வாசலில் ஒரு மூட்டை கிடந்துள்ளது. அதனை திறந்து பார்த்த போது, திருடிய பொருட்களை கொள்ளையர்களே அங்கு வைத்துச் சென்றது தெரியவந்தது. கோயில் பொருட்கள் மீண்டும் கிடைத்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்