பப்ளிக்கில் வாயை பொத்தி சிறுமி கடத்தல்? கத்தி கதறிய அக்கா - தஞ்சையில் ஷாக்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பத்து வயது சிறுமியை, மதுபோதையில் வாயை பொத்தி தூக்கிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நீடாமங்கலம் ரோடு பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு, 10 வயது சிறுமி தனது அக்காவுடன் டிபன் வாங்க சென்றுள்ளார். சிறுமி வெளியில் நின்றபோது, அங்கு மதுபோதையில் வந்த முத்துராஜ் என்பவர், சிறுமியின் வாயை பொத்தி தூக்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இதைப் பார்த்து சிறுமியின் அக்கா கூச்சலிட்டதும், அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, முத்துராஜை போலீசில் ஒப்படைத்தனர். இது பற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, முத்துராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.