கீழடியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தொல்லியல்துறை அறிவித்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி.23-ல் அறிவித்தார். இதனையடுத்து, திறந்தவெளி அருங்காட்சியம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்று தொல்லியல் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.