Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2026) | 7PM Headlines | Thanthi TV

Update: 2026-01-24 14:03 GMT
  • துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு... நீட் தேர்வு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்...
  • சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் செய்தார்.... 5வது கட்டமாக 10 மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினரிடம் நேர்காணல் நடைபெற்றது
  • பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீசார் அழைத்து சென்ற ரவுடி வெள்ளைகாளியை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீச்சு... மதுரையில் இருந்து புழல் சிறைக்கு ​ரவுடி வெள்ளைக்காளியை அழைத்து சென்ற போது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
  • செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
  • போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிய கும்பலை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலிடம் மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது...
Tags:    

மேலும் செய்திகள்