Hosur House Theft | வீட்டின் பூட்டை உடைத்து இறங்கி லட்சக்கணக்கில் நகைகள் கொள்ளை - ஓசூரில் அதிர்ச்சி
Hosur House Theft | வீட்டின் பூட்டை உடைத்து இறங்கி லட்சக்கணக்கில் நகைகள் கொள்ளை - ஓசூரில் அதிர்ச்சி
ஓசூர் அருகே, மருத்துவமனைக்கு சென்றிருந்தவரின் வீட்டின் பூட்டை உடைத்து 26 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேன்கனிக்கோட்டை ஹனிவேலி லே- அவுட் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரது வீட்டில் இந்த துணிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய தேன்கனிக்கோட்டை போலீசார், கைரேகை நிபுணர்களுடன் தடயங்களை சேகரித்தனர்.