``இந்திய அரசியலமைப்பிலும் `கீழடி' பற்றி இடம்பெற்று இருக்கும்'' - எம்பி சு.வெங்கடேசன்
50 ஆண்டுகளுக்கு முன்பு 'கீழடி' கண்டறியப்பட்டு இருந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் கீழடி குறித்த படக்காட்சிகள் இடம்பெற்று இருக்கும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்து உள்ளார். மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் மற்றும் பணிநீக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், வேத நாகரீகத்திற்கு முன்னரே கீழடி நாகரீகம் இருந்ததை ஏற்று கொள்ள மத்திய அரசு மறுப்பதாக குற்றம்சாட்டினார்.