ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை.. இந்தியா, பாகிஸ்தான் மோதல்

Update: 2025-09-09 02:48 GMT

இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 29-ஆம் தேதி போட்டி இடுகின்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டார். அப்போது ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, தன்னுடைய வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார். மேலும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஹாக்கி உலக கோப்பையையில் இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளதாக கருத்து தெரிவித்தார். மேலும் இந்த தொடருக்காக முதலமைச்சர் 65 கோடி ஒதுக்கி உள்ளதாகவும், தமிழக விளையாட்டு வரலாற்றில் இத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்