விஜய் பதில் அளிக்க நீதிபதி உத்தரவு

Update: 2026-01-10 04:16 GMT

வருமான வரித்துறை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிட்ட வழக்கில் நடிகர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலி படத்திற்கு வந்த 15 கோடி ரூபாய் வருவாயை மறைத்ததாக,

நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

ஆனால் இந்த தொகையை கட்ட நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, கால தாமதமாக அபராதம் விதிக்கப்பட்டதாக விஜய் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது என்றும், தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னரே இந்த அபராதம் விதித்ததாகவும் வருமானவரித்துறை தெரிவித்தது.

இதையடுத்து, விஜய் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 23 ஆம் தேதி தள்ளிவைத்தார்..

Tags:    

மேலும் செய்திகள்