``இந்திய வரலாற்றிலேயே..'' - ஈபிஎஸ் சொன்ன வார்த்தை

Update: 2025-09-02 03:34 GMT

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் T. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது, இந்தியாவிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை இரண்டு முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசுதான் என்று கூறினார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவை நிறைவேற்ற 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகளுக்கு காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்