சேலத்தில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12,000 அபராதமும் விதித்து சேலம் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. வாழப்பாடியை சேர்ந்த வெங்கடேசன், 2016ம் ஆண்டு தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், சாட்சியங்கள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.