உயிருக்கு போராடிய கணவன்.. காப்பாற்ற சென்ற மனைவியும் மரணம் - இரவில் கேட்ட அலறல் சத்தம்

Update: 2025-07-21 06:52 GMT

ஓசூர் அருகே துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா தனது வீட்டின் மொட்டை மாடியில் துணிகளை காய போட சென்ற போது அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற அவரது மனைவி ரேணுகாவிற்கும் மின்சாரம் தாக்கியதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்