திருப்பரங்குன்றம் மக்களுக்கு குட் நியூஸ்.. - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கை முன்னிட்டு வருகிற திங்கட்கிழமை திருப்பரங்குன்றத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகிற 19ம் தேதி திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அவர் கூறியுள்ளார்.