திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கிழக்கு மாரம்பாடியில் உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழா நேற்று இரவு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. காணிக்கை மண்டபத்தில் இருந்து சென்ட மேளம் முழங்க குழந்தை இயேசு சொரூபத்தை ஊர்வலமாக ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தி, 600க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஆலய வளாகத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து ஆலயத்திற்கு வந்தனர்.