Dindigul TVK | நாய் தொல்லை விவகாரம் - தவெக மனு கொடுக்க போகும்போது வாக்குவாதம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெரு நாய் கடித்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி, நகராட்சி அலுவலகத்துக்கு தவெகவினர் சுமார் 50 பேர் மனு அளிக்க வந்தனர். இந்நிலையில் சார்பு ஆய்வாளர், மனு அளிக்க ஏன் 50 பேர் வந்தீர்கள்? என கேட்டதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையரிடம் வார்டு பொதுமக்கள், அதிமுகவினர், தவெகவினர், பாஜகவினர் மனு அளித்தனர். இதில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.