Court Fine | புதிய பைக்கில் 'ப்ளுடூத்' கோளாறு | லம்பாக அபராதம் விதித்த நீதிமன்றம் |

Update: 2025-04-28 13:01 GMT

நெல்லையில் புதிதாக வாங்கிய பைக்கில் கோளாறு ஏற்பட்டதாக உரிமையாளர் புகார் அளித்த நிலையில் தனியார் பைக் நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஒன்றரை லட்சம் மதிப்பில் வாங்கிய புதிய பைக்கில் ப்ளுடூத் சரிவர வேலை செய்யாத மன உளைச்சல் காரணமாக பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த சிவசண்முகவேல் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன உளைச்சலுக்கு 15 ஆயிரமும், ப்ளூடூத் கட்டணம் 18 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 40 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்