"10ம் தேதிக்குள் நீங்களே வந்து குடுத்துருங்க.." - மக்களுக்கு பறந்த உத்தரவு

Update: 2025-08-24 07:57 GMT

உரிமம் இல்லா துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

உரிமம் இல்லா கள்ள நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என குடியாத்தம் வனச்சரக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 10ம் தேதிக்குள் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக வந்து துப்பாக்கிகளை ஒப்படைத்தால், அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்