நெல்லை மாவட்டம் அம்பை அருகே பாபநாசத்தில் குடும்பத்தினருடன் உறவினரின் திதி கழிப்பதற்காக வந்த கல்லூரி மாணவர் பிரதீப்குமார் என்பவர் கோயில் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு வரும்போது திடீரென மாயமனார். தொடர்ந்து மாணவன் எங்கு சென்றார் என தெரியாத நிலையில், அருகிலுள்ள வாய்க்கால் தண்ணீருக்குள் தவறி விழுந்து இருக்காலாம் என்ற சந்தேகத்தில் அம்பை தீயணைப்பு துறையினரும், மேலும் வி.கே.புரம் போலீசாரும் மாயமான மாணவர் பிரதீப்குமாரை 2 நாட்களாக தேடி தேடி வருகின்றனர்.