சென்னை முகப்பேர் அருகே ஜெஜெ நகர் பகுதியில் உள்ள பூங்கா பகுதியில் மெத் போதைப்பொருள் விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கேரளா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 பேரிடமும் இருந்து, 3.5 கிராம் மெத் போதைப்பொருள், 150 கிராம் கஞ்சா, 4 செல்போன் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.