கோவிலுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு.. 'மாஸ்க்' - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

Update: 2025-06-01 03:19 GMT

கொரொனா பரவல் காரணமாக கூட்ட நெரிசல் மிக்க கோயில்களில் இலவச முககவசம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு மதுரையில் நடைபெறும் திமுக பொதுக் குழுவில் நாட்டு நலன் கருதி முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்