``34 மருத்துவ கல்லூரிகளின் அனுமதி ரத்து?'' National Medical Council கேள்வி

Update: 2025-05-17 05:44 GMT

போதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படாததை சுட்டி காட்டி தமிழகத்தில் உள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரியின் அனுமதியை ஏன் ரத்து செய்ய கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவ மாணவர்களின் வேலையின்மை,முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் படித்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது மற்றும்ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணியமர்த்தப்பட்டது, பணி நியமன கலந்தாய்வில் ஏற்பட்ட தவறுகள் என பலவேறு பிரச்சனைகளை சுட்டி காட்டி 34 மருத்துவ கல்லூரிகளுக்கு ஏன் அனுமதி ரத்து செய்யக்கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பானை அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்