ஆலங்குடி அருகே குப்பக்குடி வெற்றியாண்டவர் அய்யனார் கோயில் காப்பு கட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வெள்ளி குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அய்யனார் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து, தங்க ஆபரணங்களை கிராம பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டு வந்தபின் காப்புக்கட்டு திருவிழா தொடங்கியது. இதில் காளியாட்டம் களைகட்டிய நிலையில், சிலர் அருள் வந்து சாமியாடினர்.