ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஜனனி சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைகள் மற்றும் திட்டங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பொது மக்களுக்கு கொண்டு செல்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மண்டல இணைச் செயலாளர் அக்ரி.பாலாஜி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் அதிமுகவை வெற்றி பெற வைப்பது குறித்து, உறுதி மொழி ஏற்கப்பட்டது.