கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மா.அரசூர் கிராமத்தின் வழியாக செல்லும் கொள்ளிடக்கரை சாலை 20 க்குமேற்பட்ட கிராமமக்களின் போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது.
இதன் வழியாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.
அது போல் பள்ளி கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சாலை சேதமடைந்துள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சாலையில் பாதி அளவில் விரிசல் ஏற்பட்டு சரிந்து கொள்ளிடம் ஆற்றுப்பக்கமாக உள்வாங்கியுள்ளது.
இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமங்களுக்கு அவசர காலத்தில் வாகனங்கள் வரமுடியாத நிலையும் இருந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சாலையானது சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தற்போது சேதமாகி உள்ளதாகவும் இதனை போர்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் எனவும்.
இந்த சாலையானது பல்வேறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறோம்
சாலை முழுமையாக துண்டிப்பு ஏற்படும் முன் அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு உடைப்பு ஏற்படாதவாறு கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்து சாலை அமைக்க வேண்டும், இதனால்
இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் சென்ற தண்ணீர் உடைப்பு ஏற்பட்டு இந்த பகுதியில் உள்ள சுமார் 30 கிராமங்களில் உள்ள வீடுகள், வயல்களில் புகுந்து பாதிப்பு ஏற்படுத்திய பகுதி எனவும், அவசர காலங்களில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வரமுடியாத சூழ்நிலை உள்ளது எனவும் ஆகவே பக்கவாட்டில் கான்கிரீட் தடுப்பு சுவர் எழுப்பி தரமான சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்."