Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.12.2025) | 6 PM Headlines | ThanthiTV
- தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்துக்கு வழங்கப்பட வேண்டிய 7 புள்ளி 35 டிஎம்சி நீரை உறுதி செய்ய வேண்டும்... கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது...
- சென்னை விமான நிலையத்தில் 7வது நாளாக இன்று 71 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன... ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தான நிலையில், பயணிகளுக்கு முழு கட்டணமும் அப்படியே திருப்பி வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது...
- இண்டிகோ விமான சேவை, நிறுவனத்தின் உள் திட்டமிடல் பிரச்சினை காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கம் அளித்தார்... விமான பணியாளர்களை பராமரிப்பது இண்டிகோ நிறுவனத்தின் பொறுப்பு எனவும், பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறினார்...
- நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நியாயம் வென்றுள்ளதாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்... நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்...
- மேற்கு வங்க தேர்தலை முன்வைத்த வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம் நடப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்... “நாட்டின் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காத பாஜக அரசு, விவாதம் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் சாடியுள்ளார்...
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிஐ அதிகாரிகள்... சேலம் மாவட்ட தவெக நிர்வாகி மற்றும் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சங்கர் கணேஷ் என்பவரின் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவுபெற்றது...