மன அழுத்தத்தின் காரணமாக நடிகர் ராஜேஷ் உயிரிழந்து இருக்கலாம் என நடிகை வடிவுக்கரசி கண்ணீர்மல்க கூறினார். சென்னை ராமாபுரத்தில் ராஜேஷின் உடலுக்கு வடிவுக்கரசி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு கண்ணீர்மல்க பேட்டி அளித்த அவர், நடிகர் ராஜேஷ் மிகவும் பொறுமையான மனிதர் என்றும், அவருக்கு வேதனைகள் அதிகம் இருந்ததாகவும் கூறினார்.