Vaniyambadi Issue | ஒரு பூந்தொட்டிக்கு களேபரமா? - குபுகுபுவென ஓடிவந்த 100 பேர்

Update: 2025-06-19 07:24 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. வாணியம்பாடியைச் சேர்ந்த சிராஜ், தனது உறவினரை காரில் அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது கார் மோதி சிறிய பூந்தொட்டி ஒன்று உடைந்துவிட்டது. இதை கவனித்த மருத்துவமனை காவலாளி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிராஜ் தரப்பினர், கடும் வாக்குவாதம் செய்தனர்.

சண்டையை விலக்க வந்த தேநீர் கடைக்காரர் மற்றும் ஊழியர்கள் தாக்கியதில் சிராஜ், அவரது சகோதரர் மகன் உள்ளிட்ட இருவருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த சிராஜின் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதல் நடத்திய நபர்களை உடனே கைது செய்ய அவர்கள் வலியுறுத்தினர். தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரம் நிலவிய பதற்றமான சூழல் கட்டுப்படுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக சோனி , பூபதி, அஜய், சக்தி, புருஷோத் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரவாதம் அளித்ததன் பேரில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

இதனால் மருத்துவமனை வளாகம் உண்டு நள்ளிரவு ஒரு மணி வரை பதற்றமான சூழல் நிலவியது.

சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் சம்பவம் குறித்து சோனி , பூபதி, அஜய், சக்தி, புருஷோத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்